Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சமைக்கும் போது நடந்த விபரீதம் …. 15 பவுன் தங்க நகை தீயில் எரிந்து நாசம் ….!!!

கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பவுன்  நகை, ரூபாய் 25,000 ஆயிரம் தீயில்  எரிந்து சேதமடைந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம்  வாய்மேட்டை அடுத்துள்ள  தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது .அதோடு  வீட்டு உபயோகப் பொருட்கள் 15 பவுன் நகை மற்றும் ரூபாய் 25,000 ஆயிரம் ஆகியவை அனைத்தும் தீயில் எரிந்த சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ,ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அருள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

Categories

Tech |