இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ராயல் பூட்டான் ஆர்மியும் இந்திய ராணுவமும் இணைந்து பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
இதனால் சரியாக பார்க்க முடியாத நிலையில் பனிப்புகை காரணமாக அந்த ஹெலிகாப்டர் தடுமாறி மலைப்பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது இதில் பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் உயிரிழந்தனர். இதையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.மேலும் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.