நண்பர்கள் தினமான இன்று ஆர்.ஆர்.ஆர் படக் குழு வெளியிட்டுள்ள “நட்பு” என்னும் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தினை கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் நட்பு என்னும் பாடலை படக்குழுவினர்கள் நண்பர்கள் தினமான இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு படக்குழு வெளியிட்ட வீடியோவில் ஒரு பெரிய அரங்கில் அனிருத் பாடுகிறார்.
அதன் பின்னணியில் பலரும் நடனம் ஆடுகிறார்கள். அதன்பின் இறுதியில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் நடிகர்கள் வருகிறார்கள். இவ்வாறு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இந்தப் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.