Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். 

கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வியெழுப்பியிருந்தது.

Image result for சுபஸ்ரீ

இதையடுத்து  இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பேனர் வைத்த முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் சேப் 14ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மேலும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரிவு  விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

Image result for சுபஸ்ரீ

அதன்பிறகு  வழக்கு  பதிவு செய்தும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என உய்ரநீதிமன்றம் கேள்வியெழுப்ப, அதற்கு தமிழக அரசு விரைவில் ஜெய்கோபால் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தது.  இதற்கிடையே போலீசார் கடந்த 20 ஆம் தேதி சம்மன் அனுப்பியும் ஜெயகோபால் விசாரணைக்கு ஆஜராக வில்லை.  அதை தொடர்ந்து காவல்துறையினர் ஜெயகோபாலை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து  இன்று காலை தனிப்படை போலீசார் திருச்சி மற்றும் ஒகேனக்கலுக்கு சென்று தேடி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வந்த ஜெயகோபாலை  தனிப்படை போலீசார் கைது செய்தனர்

Categories

Tech |