Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு பிரம்மாண்ட படங்கள்… கெத்து காட்டும் நடிகர்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தற்போது நடிகர் பிரபாஸ் நான்கு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பிரபாஸ் தனது கைவசம் உள்ள சலார், ராதே ஷியாம், ஆதி புரூஷ் உள்ளிட்ட படங்களை இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்து முடித்துள்ள ராதே ஷியாம் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் அவர்களால் திட்டமிட்டபடி திரையில் வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில் ஜனவரி மாதம் ராதே ஷியாம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகை சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் 40% படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆதி புரூஸ் திரைப்படம் ராமாயணத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதாகவும் பிரபாஸ் அந்தப்படத்தில் ராமனாகவும், ராவணனாக சயீப் அலிகானும், சீதையாக கிரித்தி சனோனும் நடித்து வருகின்றனர். அந்தப் படங்களும் முடிந்த பிறகு பிரபாஸ் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தீபிகா படுகோனே, அமிதாபச்சன் உள்ளிட்டோரும் அந்த படத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அந்த படத்திற்கு பெயர் எதுவும் வைக்கப்படவில்லை.

Categories

Tech |