தலீபான்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து தெற்கு ஆப்கானிஸ்தானில் கந்தஹார் விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவிக்கையில் “சனிக்கிழமை இரவு அன்று 3 ராக்கெட்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இரண்டு ராக்கெட்கள் விமான ஓடுதளத்தில் மீது மோதியது.
இதனால் ஓடுபாதை பழுதாகியுள்ளது. எனவே அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சீர்ப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு விமான சேவை தொடரும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதனை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் போக்குவரத்து பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலானது ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டவாது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை கைப்பற்ற நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.