தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து கொடைக்கானலில் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் கொரோனா பரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை கொரோனா பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கின்றனர்.