இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர் எப்போதும் சாம்பியனாக உள்ளார். பல ஆண்டுகளாக, அரசுக்கும் பயனாளிக்கும் இடையே, குறிப்பிட்ட விவரங்களுடன் இலக்குகள் மற்றும் ஆதார கசிவு இல்லாமல் அதன் நோக்கம் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்தின் இந்த தொலைநோக்கை, மின்னணு சான்று என்ற கருத்து முன்னெடுத்து செல்கிறது.
இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -சான்று. இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும். இதை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.