இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக் புக் தொடர்பான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்தும் நபர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கொடுக்கப்படமாட்டாது என்று வங்கி கூறியது. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் ஒரு புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.