நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தது. அதன்படி நாங்குநேரி இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று நேற்று இரவு காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரூபி மனோகரனை தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் ரூபி மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Congress President Smt. Sonia Gandhi approves the candidature of Shri Ruby Manoharan for ensuing by-election in Tamil Nadu. pic.twitter.com/we2hfy1AVr
— Congress (@INCIndia) September 27, 2019