Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே ஆண்டில் இவ்ளோ பெண்கள் உயிரிழப்பா…? பின்னணியில் இருக்கும் கொரோனா…. தகவல் வெளியிட்ட உள்துறை அமைச்சர்….!!

பிரான்சில் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்து போடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வீட்டில் அடங்கிக் கிடக்கும் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையினால் சுமார் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டிலும் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்தே கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அந்நாட்டில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டிலேயே இருப்பதினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக கடந்தாண்டில் மட்டும் சுமார் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, கொரோனா காலகட்டத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையினால் சுமார் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவர்கள் அதிகமாக கணவர்களாலும், காதலர்களாலும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |