Categories
உலக செய்திகள்

முச்சந்திக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்கள்…. சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த 2 பெண்களை பாலியல் தாக்குதல் நடத்திய பேயோட்ட வந்த மந்திரவாதியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மந்திரவாதி பேய் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் பேய் ஓட்டுவதாக கூறி அவ்வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பின் வீட்டில் ஆண்கள் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி அங்கிருந்த 2 பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் பேய் ஓட்ட வந்த மந்திரவாதியை கைது செய்து நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தவுள்ளார்கள்.

Categories

Tech |