மியான்மரில் வரும் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹலைங் தெரிவித்துள்ளார்.
மியான்மர் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் ஆகிய அரசியல் அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 900க்கும் அதிகமானோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையேயி ராணுவ ஆட்சியை அமைந்த ஆறு மாதங்களுக்கு பின் தற்போது தேசிய நிர்வாக கவுன்சில் இடைக்கால அரசு அமைத்துள்ளது. மேலும் தேசிய நிர்வாகக் கவுன்சில் தலைவரும் ஆயுதப் படைகளின் தளபதி மின் ஆங் ஹலைங் விரைவில் பிரதமராக பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் ஆங் ஹலைங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மியான்மரில் பல கட்சிகள் பங்கேற்று ஜனநாயக தேர்தல் நடத்துவதற்கான பணி துவங்கபட்டுள்ளதாகவும் அந்தப் பணி நிறைவடைந்தவுடன் வரும் 2023ல் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.