தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பால், மருந்து, காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் கொண்டு இயங்கும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.