தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோவில், மயிலாப்பூர், பழனி திருப்பரங்குன்றம், திருத்தணி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.