வாழைநார் மூலம் கைவினைப் பொருட்கள் செய்யும் உற்பத்தி கூடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி பகுதியில் காதி கிராப்ட் சார்பில் வாழைநார் மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, களக்காடு பகுதிகளில் அதிகமாக வாழைகள் பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. எனவே களக்காடு வட்டார பகுதி வாழை பயிரிடுவதற்கு தகுந்த இடமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவில் வாழைநார் மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்வதில் களக்காடு பகுதி இரண்டாவது இடத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், காதி கிராம தொழில் மைய தென்மண்டல உறுப்பினர் சேகர்ராவ் பிரேலா, புரனமைப்பு திட்ட இயக்குனர் சுசிலா பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.