Categories
உலக செய்திகள்

45 வருடங்களுக்குப் பிறகு… இறந்தவர் உயிருடன் வந்த அதிர்ச்சி… வெளியான புகைப்படக் காட்சி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர் ஒருவர் 45 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்த சஜ்ஜத் டங்கல் என்பவர் தனது 25 வயதில் நடிகை ராணி சந்திரா குழுவுடன் சேர்ந்து கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமான விபத்தில் சஜ்ஜத் டங்கலும் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருந்தனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்யாமல் மும்பையில் தான் இருந்துள்ளார். மேலும் அவர் அந்த விமான விபத்து சம்பவத்தை அறிந்து மிகவும் வருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்று சஜ்ஜத் உயிருடன் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினருடன் அவரை சேர்த்து வைத்துள்ளது.

அப்போது சஜ்ஜத் டங்கலின் தாய் பாத்திமா பீவி (91) தனது மகன் இறந்து விட்டதாக எண்ணி இருந்த நிலையில் அவர் தனது 41 வயதில் மீண்டும் உயிருடன் வருவதை கண்டு சந்தோசத்தில் கண்கலங்கி தனது மகனை கட்டி அணைத்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |