Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கோவலன் காட்டு நடு வளவு பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய சாருநிதி என்ற மகளும், 5 வயதுடைய ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்டதால் பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வருகின்றார். இந்நிலையில் பிரியா குழந்தைகளுக்கு சமையல் செய்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து பிரியா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது தனது மகளான சாருநிதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையான சாருநிதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அபினவ், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எவ்வாறு ஒரு சிறுமி தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் காவல்துறையினர் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பிரியாவின் கணவர் இறந்து பிறகு அவரின் வீட்டிற்கு யார் யார் வந்து செல்கிறார் என்று நடத்திய விசாரணையில் அவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் அவர் அடிக்கடி பிரியாவின் வீட்டிற்கு செல்வது தெரியவந்ததுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது கொலையா அல்லது தற்கொலையா போன்ற விபரம் குறித்து குழந்தையின் தாயான பிரியா மற்றும் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |