இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் தற்போது சீனாவிலுள்ள 18 மாவட்டங்களில் பரவி கடந்த 10 நாட்களில் 300 க்கும் அதிகமான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இவ்வாறு பரவிய கொரோனா வைரஸ் இந்திய நாட்டிலும் அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் முதன்முதலாக இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் தற்போது சீன நாட்டிலும் பரவி வருகிறது. அதாவது சீனாவிலுள்ள 18 மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களில் 300க்கும் மேலானோருக்கு இந்த உருமாற்றமடைந்த டெல்டா வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் டெல்டா பரவியுள்ள சில முக்கிய நகரங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.