Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: அனைவரும் பள்ளிக்கு வர… தமிழக அரசு உத்தரவு….!!!

தொடக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலே பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதலில் தமிழகத்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தது. இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் தினமும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல் பணி, கல்வி தொலைக்காட்சி பணிகள், மாணவர் சேர்க்கை பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |