56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவைகளை இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஐந்து முக்கியமான ரயில் வழித்தடங்கள் உள்ளது. அதில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடமானது கொல்கத்தா- சிலிகுரி இடையிலான அகல பாதையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனை அடுத்து வங்கப்பிரிவினைக்கு பிறகும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன் பின்பு 1956ல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ரயில் சேவையானது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வழித்தடத்தை மீண்டும் இந்திய பிரதமர் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் தொடங்கி வைத்தனர். இதனை காணொலி தொகுப்பு வாயிலாக துவக்கினர்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ரயில் போக்குவரத்து துவக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 56 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் இயக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயிலானது வங்காளத்தின் டம்டிம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அதில் 40 பெட்டிகளில் 2,500 டன் கற்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயிலானது சென்றுள்ளது. இது நேற்று நண்பகல் 1.30 மணிக்கு பங்களாதேஷில் உள்ள சிலஹடி ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. மேலும் இதனை இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் வங்காள அரசு அதிகாரிகளும் சேர்ந்து வரவேற்றுவுள்ளனர்.