Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி”… என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தர பாஜக முடிவு.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.  

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக விருப்பமனுக்களை பெற்று வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதிக்காக விருப்பமனுக்களை பெற்றதால் அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன்பின் நேற்று முன்தினம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமை அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு புதுச்சேரி பாஜக அதிர்ச்சியடைந்தது.

Image result for என்.ஆர்.காங்கிரஸ் அதிமுக

தங்களுடன் கலந்து ஆலோசிக்க முடிவு செய்யவில்லை என விரக்தியடைந்த பாஜக தனித்து போட்டியிடும் எனவும், நாளை காலை 10 மணிக்கு விருப்பமனு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்று  அக்கட்சி தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று காமராஜர் தொகுதிக்காக பாஜகவுடன் என் ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டாம் என  பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பாஜக  எங்களுடைய கட்சித் தலைமையின்  அறிவுரையின் படி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இருப்பினும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று  கூறியதால்  புதுச்சேரி அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image result for என்.ஆர்.காங்கிரஸ்

பாஜகவின் கட்சி மேலிடத்தில் என் ஆர் காங்கிரஸ் அல்லது கூட்டணி கட்சியான அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் பட்சத்தில் இது சமாதானத்தை ஏற்படுத்தும் இல்லை என்றால் பாஜக தலைமை போட்டியிட சொன்னால் தனித்துப் போட்டியிட கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று நேர்காணலும் நடைபெற்றது. ஆகவே பாஜக தன்னிச்சையாக நிற்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.  பாஜக கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் காமராஜ் நகர் தொகுதியை விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.

Categories

Tech |