ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ் தான் நாட்டின் தலிபான்களின் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 254 பேர் கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கான் அரசு மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகர், பாரக், ஜொஸ்வான், ஹெராத், ஹெல்மாண்ட், சமன்கண், குண்டுஸ், காபூல், தஹார், காஸ்னி, பாலக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான்கள் 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.