இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்திருக்கிறார். எனினும் அவரின் பெற்றோர்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் திருமண நாள் அன்று திடீரென்று அவரின் காதலி மண்டபத்திற்குள் நுழைந்து தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.
இரு பெண்கள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் குழம்பி தவித்துள்ளார். அதன்பின்பு எப்படியோ இரு பெண்களையும் சமாதானம் செய்து ஒரே மேடையில் இருவரையும் திருமணம் செய்திருக்கிறார். இச்சம்பவம் திருமணத்திற்கு வந்த அனைத்து மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
மேலும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மேடையில் திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.