கரடியை பார்த்ததும் காட்டெருமை தேயிலை தோட்டத்திலிருந்து மிரண்டு ஓடியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் விவசாயிகள் பேரிக்காய் மரங்களை ஊடுபயிராக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரங்களில் காய்த்துள்ள பேரிக்காயை சாப்பிடுவதற்காக கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அப்பகுதியில் இருக்கும் பேரிக்காய் மரத்தில் ஏறி கரடி காய்களை பறித்து தின்று கொண்டிருந்தபோது தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்துள்ளது.
இதனை அடுத்து காட்டெருமை மரத்திற்கு அருகில் சென்ற போது கரடி அதனை பார்த்து கத்தியுள்ளது. அதன்பின் கரடி சத்தத்தை கேட்டதும் காட்டெருமை அங்கிருந்து மிரண்டு ஓடிவிட்டது. எனவே தேயிலைத் தோட்டங்களில் சுற்றி வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.