செல்பி எடுக்க முயன்ற தந்தை, மகன் இருவரையும் சிறுத்தை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கியம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை பார்த்ததும் மகேஸ்வரி தரையோடு தரையாக படுத்துவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்து ஊர் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கேயம் கிராமத்தில் வசிக்கும் மனோகரன், அவரது மகன் ஹரிபாஸ்கர், விவசாயியான துரைசாமி, சௌந்தர்ராஜன், நல்லேந்திரன் போன்றோர் சிறுத்தையை தேடி சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுத்தையை தேடும் போது செல்பி எடுக்க முயன்ற துரைசாமி மற்றும் ஹரிபாஸ்கரை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியுள்ளது. அதன்பிறகு அப்பகுதியில் இருந்த குகைக்குள் சிறுத்தை ஓடிவிட்டது.
இதனையடுத்து கிராம மக்கள் படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின் சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். மேலும் தனியாக யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.