Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்தது தப்பா….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு…!!

இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் தர்மராஜ் இளையராஜாவின் மனைவியிடம் அடிக்கடி பேசியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளையராஜா என் மனைவியிடம் நீ எப்படி பேசலாம் என தர்மராஜை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தர்மராஜ் தனது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். இதனை அடுத்து இளையராஜாவை தர்மராஜும், அவரது நண்பர்களும் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாயியான முகிலரசன் என்பவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

இதனையடுத்து கோபமடைந்த தர்மராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இளையராஜாவையும் முகிலரசனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த முகிலரசன் மற்றும் இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகிலரசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |