காட்டுத்தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டில் மத்திய தரைக் கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் உள்ள காடுகளில் சென்ற வாரம் தீ வேகமாக பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கி உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் பெகிர் பக்டிமிர்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மனவ்காட் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் மர்மரிஸ் பகுதியில் ஒருவரும் என மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மனவ்காட் பகுதியில் படுகாயமடைந்த 507 பேரில் 497 பேர் குணமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 203 பேரில் 186 பேர் நலமாகவுள்ளனர். மேலும் மெர்சின் பகுதியைச் சேர்ந்த 154 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.