ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரானிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 32,511 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 366 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே இதுவரை 39 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 12 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இதுவரை 91 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே 33.85 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4.27 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..