கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பூங்காவை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின்2-ம் அலை வேகமாகப் பரவியதால் இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதனால் கோவில்கள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் படி ஊரடங்கிலிருந்து பல தளர்வுகளை அறிவித்ததுள்ளது. அதனால் கோவில்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்தையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேட்டூரில் ஆற்றில் குளிப்பது அப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் விளையாடுவது என்று மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது என உதவி கலெக்டர் வீர் பிரதாப்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் என்பவர் ஆடிப்பெருக்கில் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு சென்று நீராடுவது வழக்கம்.
மேலும் ஆடிப்பெருக்கில் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நீர் நிலைகளில் குளிப்பதும், அங்குள்ள பூங்காவுக்கு செல்வதுமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கும், பூங்காவிற்கு செல்லவும் தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மேட்டூரில் உள்ள பூங்கா நேற்று காலை முதல் மூடப்பட்டு அறிவிப்பு பலகை கேட்டின் முன்பு தொங்க விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வைத்திருந்த அறிவிப்புப் பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.