Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் ஒரு வேலையா… மதுக்கடையில் நடந்த திருட்டு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுக்கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல வியாபாரத்தைமுடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 3,000 ரூபாய் மற்றும் மது பாட்டில்கள் மர்ம நபர்கள் திருடி சென்றிருந்துள்ளனர்.

இதுகுறித்து முத்துமாரி கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தீவிர குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் ஆர்.எஸ்.மங்களம் இந்திராநகரை சேர்ந்த மகேஸ்வரன்(36) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இதுபோன்று பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வந்ததும் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த மகேஸ்வரன் இந்த மது கடையில் திருடியது தெரியவந்துள்ளது. தற்போது மகேஸ்வரன் தூத்துக்குடியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் தூத்துக்குடிக்கு சென்று மகேஸ்வரனை கைது செய்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரனை நாமக்கலுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |