Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட பாடலுக்காக இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

வலிமை படத்தின் பாடலுக்காக மாஸ்டர் பட கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இன்று வலிமை படத்தின் முதல் பாடல் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Anirudh - Vignesh Shivan | Magical director & composer combo that produced  a gem of albums!

‘வேற மாதிரி’ என்ற இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலில் யுவன் சங்கர் ராஜா- அனிருத்- விக்னேஷ் சிவன்  மூவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இதே கூட்டணி வலிமை பட பாடலுக்காக இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் .

Categories

Tech |