ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காளிதாஸ் பள்ளி தெருவில் கமலம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அப்பகுதியில் வடை, பஜ்ஜி போன்றவை சுட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கமலம் கடைக்கு செல்வதற்க்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கமலம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கமலம் அலறியதும் அந்த 2 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இதனை அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது சங்கிலியை பறிக்க வந்த மர்மநபர்கள் முகம் தெளிவாக பதிவாகி இருந்துள்ளது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பதிவான வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.