Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் மட்டும் கடும் ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, பழ சந்தை, பறவை காய்கறி சந்தையில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 22 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளார்.

Categories

Tech |