Categories
உலக செய்திகள்

மீண்டும் வந்த கொரோனா வைரஸ்…. பரிசோதனை தீவிரம்…. பயணிகள் வருவதற்கு தடை….!!

டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சீனா அரசு அமல்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரசினால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படைந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று பரவலானது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை. மேலும் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள்  தீவிரமாக ஈடுபட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சீனாவில்  20 நகரங்களில் டெல்டா வைரஸ் தாக்குதல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் அங்கு தீவிர பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பரிசோதனையில் 12 நகரில் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீனா அரசு பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதிலும் உகான் மாகாணத்தில் ஜூஜென் பகுதியில் பரிசோதனை காரணமாக மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |