கலிபோர்னியாவில் மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வடக்கு கலிபோர்னியாவிலுள்ள வனப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் தற்போதுவரை 2.44 லட்சம் வரையிலான அதாவது மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% காட்டுப்பகுதி திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து சுமார் 9 கட்டிடம் சேதாரமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். மேலும் இந்த வனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீக்கு காரணமானவர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.