இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை பார்த்த மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமரப்பன் கிராமத்தில் டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழுமத்தினர் இறந்த டால்பின் மீனை பார்வையிட்டுள்ளனர்.
அதன் பின் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் டால்பின் மீனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அங்கேயே புதைத்துவிட்டனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் இறந்த டால்பின் ஒரு அடி அகலமும் சுமார் 100 கிலோ எடை கொண்டது எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டால்பின் மீன் இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.