அர்ஜெண்டினாவில் திடீரென இரண்டு ஏரிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவில் உள்ள பழமையான இரண்டு ஏரிகளில் தண்ணீர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆய்வாளர்கள் ஏரியில் உள்ள தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்ன என்பது குறித்த குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த ஏரிக்கு அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் உள்ள தண்ணீரில் நேரடியாக வந்து கலப்பதால் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.