Categories
உலக செய்திகள்

தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா…. சர்வதேச அமைதியை வலுப்படுத்த நடவடிக்கை…. பிரான்சுக்கு நன்றி தெரிவித்த முக்கிய தலைவர்….!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து இந்தியா ஏற்றுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமாக 15 உறுப்பினர் நாடுகள் உள்ளது. இந்த 15 உறுப்பினர் நாடுகளில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்தியா உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளார்கள்.

இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுழற்சி அடிப்படையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும். அதன்படி கடந்த மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் வகித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரான்ஸ் நாடு ஜூலை மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பை ஏற்று அதனை மிகவும் சிறப்பாக வழி நடத்தியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மிகவும் அதிகமாக வலுப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |