புடலங்காய் சட்னி
தேவையானபொருட்கள் :
சின்னவெங்காயம் – 10
தக்காளி – 1
வரமிளகாய் – 3
புடலங்காய் – 1
புளி – சிறிது
நல்லெணெய் – தேவைக்கேற்ப
உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்து அதனுடன் சின்னவெங்காயம் , வரமிளகாய் , தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கி வேகவிட வேண்டும் . வெந்தவுடன் ஆறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , வரமிளகாய் ,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான புடலங்காய் சட்னி தயார் !!!