Categories
உலக செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்…. போராட்டத்தில் பொதுமக்கள்…. கைது செய்த போலீசார்….!!

ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பிரான்ஸ் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரான்சில் டெல்டா வகை வைரஸ் பரவலை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் பாஸ்போர்ட்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் 9ஆம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள், திரையரங்கம், நீச்சல் குளங்கள் அருங்காட்சியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முன் களப்பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு பிரான்ஸ் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் சுமார் 2,00,000 மக்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியதில் “நான் செவிலியராக இருந்தேன் ஆனால் இப்பொழுது எனது பணியை ராஜினாமா செய்துவிட்டேன். அரசு மக்களை தவறாக வழி நடத்துகிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடாது. மேலும் கட்டுப்பாடுகளை எங்கள் மேல் திணிக்க முயன்று வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தை போலீஸ்காரர்கள் தண்ணீர் பீச்சியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முற்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இவ்வாறு போராட்டங்கள் தொடரும் நிலையில் 4000 காவலர்கள் கலவரங்களை அடக்குவதற்காக இறக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக  ஃபிரான்ஸில் நாளொன்றுக்கு 20,000 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவதால் தான் ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |