சுவிட்சர்லாந்தில் தலிப்பான் என கூறி இளம்பெண்ணை அவமதித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் 18 வயது இளம்பெண்ணை 36 வயதான நபர் ஒருவர் தீவிரவாதி என அடையாளப்படுத்தி அவரை அவமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில் 30 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதமும், நீதிமன்றம் விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகளும், 30 பிராங்குகள் என 30 நாட்களுக்கு நிபந்தனை அபராதமும் விதித்து சூரிச் மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.