கோவைக்காய் பொரியல்
தேவையானபொருட்கள் :
கோவைக்காய் – 250 கிராம்
சின்னவெங்காயம் – 20
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் , தக்காளி , மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் கோவைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான கோவைக்காய் பொரியல் தயார் !!!