Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரியில் என் பெயர் “பிகில்”.. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஜாலியாக பேசிய சூர்யா..!!

நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பில், தான் நன்றாக விசில் அடிப்பதால், தன்னை கல்லூரியில் ‘பிகில்’ என்று தான் அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையதளத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று நடந்திருக்கிறது. எனவே கல்லூரி சார்பாக முன்னாள் மாணவர்களில், சிறப்பாக விளங்கிய நபர்களுக்கு, இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதால் அவரும் இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் வாயிலாக மீண்டும் கல்லூரியில் படித்த காலங்கள் கண்முன் வருகிறது. கல்லூரியில் படித்த காலகட்டங்களில் எனக்கு பாடல் பாட வராது.

எனவே அந்த பாடலுக்காக விசிலடித்து தான் என் உற்சாகத்தை வெளிப்படுத்துவேன். இதனால் என்னை கல்லூரியில் ‘பிகில்’ என்று தான் கூப்பிடுவார்கள். இந்த தொற்று காலகட்டங்களில் அனைவரும் தங்களை பாதுகாத்து, உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |