இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் தேசிய விருது பெற்றது. இதை தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் வசந்தபாலன் அடுத்ததாக அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமடைந்த துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
கொரோனாவோட போராடியாச்சு,
இப்போ ஷூட்டிங் ஸ்பாட் போராட்டம், இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குன்னு களத்தில் இறங்கியிருக்கும் எங்கள் இயக்குநரை மறுபடியும் வசந்த காலத்திற்கு வரவேற்கிறோம்!👏#VasanthaBalansNext@Vasantabalan1 @iam_arjundas @officialdushara @gvprakash @onlynikil #ArjunDas pic.twitter.com/tDeDIJETln— Urban Boyz Studios (@UBoyzStudios) August 1, 2021
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது இயக்குனர் வசந்தபாலன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த வசந்தபாலன் தற்போது தனது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். மேலும் அதிரடியான காட்சிகளுடன் நடைபெற்று வரும் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.