Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் வெண்பொங்கல் செய்வது எப்படி !!!

ஹோட்டல் வெண்பொங்கல்

தேவையான பொருட்கள் :

அரிசி –  1  கப்

பாசிப்பருப்பு –  1/4  கப்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 1

முந்திரி – 10

பச்சைமிளகாய் – 1

இஞ்சி – சிறிய துண்டு

பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை –  தேவைக்கேற்ப

நெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

வெண்பொங்கல்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரிசி சேர்த்து கழுவி ஒரு குக்கரில் போட்டு  4 கப் தண்ணீர் , தேவையான உப்பு , கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும் . இதனை  நன்கு மசித்து விட வேண்டும் . ஒரு கடாயில் நெய் ஊற்றி  மிளகு ,வரமிளகாய் , பச்சைமிளகாய் , இஞ்சி , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் , வறுத்த முந்திரி சேர்த்து பொங்கலில் கொட்டி கிளறினால் சுவையான வெண்பொங்கல் தயார் !!!

Categories

Tech |