தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தின் காரணமாக ஆண்களின் கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டத்தின் காரணமாக அதற்கு ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சில பகுதிகளில் ஆண்களிடம் இதற்கு முன்பு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 5 வசூல் செய்யப்பட்டது. தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 வசூல் செய்யப்படுகின்றது. இது அரசாணைக்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.