பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு தகவலை கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் முதல்பாதியில் கதைக்கான விவாதத்தில் நான் பணியாற்றினேன். எனினும் அதற்காக தனக்கு எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை என்று தெரிவித்தார்.