தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர் இயக்குனர் வினோத். இப்போது தல அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.மேலும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது. இதனிடையே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் “நாங்க வேற மாதிரி” என்னும் பாடல் இன்று இரவு 10.45 மணி அளவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.