Categories
தேனி மாவட்ட செய்திகள்

எதுவுமே சொல்லாம போய்ட்டான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக சிறுவன் பலி…!!

தேனி மாவட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராஜகோபாலன்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய 2வது மகன் பழனிக்குமார்(18) 12ஆம் வகுப்பு முடிந்த நிலையில் கல்லூரில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் அவரது மகனை கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் பழனிகுமாருக்கு அந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என கூறியும் பெற்றோர்கள் கேட்காததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பழனிக்குமார் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அவர்களது சொந்த ஊரான ராஜகோபாலன்பட்டிக்கு சென்றுள்ளார். மேலும் மிகவும் மனவுளைச்சலில் இருந் பழனிக்குமார் அவரது தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து வந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |